2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இசை நிகழ்ச்சியில் கைகலப்பு: இளைஞன் பலி

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயுரபாத விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின்போது,  இடம்பெற்ற கைகலப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பானகமுவ - அம்புலுகல பகுதியைச் சேர்ந்த தினுஷ புத்திக்க விக்கிரமசிங்க (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 9.00 மணி அளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது, கடும் காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞனும் அவரது நண்பனும்  மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் குறித்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2.10 மணி அளவில்உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நபர்களை கைது செய்வதற்கு மாவனெல்லை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .