2025 மே 19, திங்கட்கிழமை

இதுவரை 4,000 பேர் நாய் கடிக்கு இலக்காகியுள்ளனர்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாய் கடிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4,000 அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதி செயலாளரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளரமான பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்து தட்டுபாடு தொடர்பில், பதுளை- பொது வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாய் மற்றும் பூனைக் கடிகளுக்கு இலக்காவதால் ஏற்படும் நீர்வெறுப்பு நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் ஊசி மருந்துகளுக்கு பாரிய தட்டுபாடு நிலவுவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு செல்லப்பிராணிகள் அல்லது கட்டாகாலி பிராணிகளால் ஒருவர் காயங்களுக்கு உள்ளானால் அந்த பிராணியை 14 நாட்களுக்கு பாதுகாப்பாக பராமரிக்குமாறு ஆலோசனை வழங்கும் அளவிற்கு சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதன்மூலம் மருந்து தட்டுப்பாடு நிலைமை எவ்வளவு தூரம் மோசமடைந்துள்ளது என்பதை புரிந்துக்கொள்ளலாம் என்றார்.

மேலும் வெளிநோயாளர் பிரிவுக்கு 10 மருந்துகள் தேவை. எனினும் 6 மருந்துகள் மாத்திரமே காணப்படுகின்றன. அதி தீவிர பிரிவுக்கு தேவையான மருந்துகள் இல்லை. அத்துடன் இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்தும் கையிருப்பில் இல்லை என்றார்.

நீரிழிவு நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை உரிய காலத்தில் வழங்கப்படாது விடத்து, நீரிழவு நோயை கட்டுப்படுத்த முடியாது என்றார். இதனை விட சிறுநீரக நோயாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

அரச வைத்தியசாலைகளில் மாத்திரமல்ல சில தனியார் பாமசிகளிலும் மருந்துகள் இல்லை. அவ்வாறு இருந்தாலும் விலைகள் தாங்கிக்கொள்ள முடியாதளவு உள்ளன என்றார்.

இந்த நிலையில், பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைத் தரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும் வார்டுகளில் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X