மொஹொமட் ஆஸிக் / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்தியாவைத் தெரிந்துகொள்ளுங்கள்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ, “பாரத் கோ ஜானியே” வினா-விடைப்போட்டி நிகழ்வொன்றை, இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சு ஒழுங்கு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வினா-விடைப் போட்டியில் வெற்றிபெறும் 15 பேர், இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாரத் கோ ஜானியே” வினாபோட்டி, ஒன்லைன் முறையில் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 4 சுற்றுகளைக் கொண்டிருக்கும். போட்டியாளர்கள் மூன்று வகையில் பிரிக்கப்பட்டுவர். இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவழியினர், வெளிநாட்டு பிரஜைகள் என, 18-35 வயதுப்பிரிவினர் இப்போட்டியில் பங்குபற்றலாம்.
போட்டிகளின் நான்கு சுற்றுகளும் www.bharatkojaniye.in என்ற இணைய வழியாக நடைபெறும். இறுதிப் போட்டியில் தெரிவாகும் 15 வெற்றியாளர்கள் கொவிட் -19 பிரச்சினை முடிவடைய, இந்திய சுற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
போட்டிக்கான பதிவு, இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்றும் பங்கேற்பாளர்களுக்கு, முதல் சுற்றின் திகதிகள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் www.bharatkojaniye.in எனும் இணையத்தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கண்டி உதவி இந்தியத் தூதரக வலைத்தளம் https://ahcikandy.gov.in,டுவிட்டரின் @ Ahcikandy, பேஸ்புக்கில் https://www.facebook.com/AssistantHighCommissionOfIndiaKandySriLanka எனும் முகவியின் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago