2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தர்ம ஊர்வலம்

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கணேசன்

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆளுபவர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் ஆசி வேண்டியும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தர்ம யாத்ரா தர்ம ஊர்வலம், நேற்று வியாழக்கிழமை (12) ஹட்டன் நகரை வந்தடைந்தது. 

இதன்போது ஹட்டன் தலைமையகப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் தயால் திகாவத்துரை தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஹட்டன் நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச கலந்துகொண்டு இவ் தர்ம ஊர்வலத்துக்கான வழிபாடுகளைச் செய்தார்.

நாட்டு மக்களுக்கும், உலக மக்ளுக்கும் நல்லாசி வேண்டி இடம்பெற்ற இத்தர்மம ஊர்வலம், கடந்த 07ஆம் திகதி வாத்துவை சந்திராராம மிஹிந்துமா விகாரையிலிருந்து ஆரம்பமாகி பிரசித்தி பெற்ற பௌத்த விகாரைகளான சேறுவாவில மற்றும் திரியாய இசோமாவத்தியபதெனிய உட்பட பல பிரசித்தி பெற்ற பௌத்தளங்களுக்கு சென்று எதிர்வரும் 20ஆம் திகதி இரத்தினபுரி சமன் தேவாலயத்தினை சென்றடைய உள்ளது.

இத் தர்ம ஊர்வலத்தில் புத்தபெருமானின் திருப்பாதம் மற்றும் தூபி ஆகியன வைக்கப்பட்டுள்ளன.

வாத்துவை சந்திராராம மிஹிந்துமா விகாரையின் விகாராதிபதி போபிட்டிய தம்மேஸ்வரவின் தலைமையில் இவ் ஊர்வலத்தில் பொலிஸ் நலன்புரிப் பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி டி.பந்துல சந்திரிசிறி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .