Niroshini / 2016 மே 16 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் வீதியின் புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொயண்டிருந்த புனரமைப்பு இயந்திரத்தின் அதிர்ச்சியினால் வீதியோரமாக இருந்த லூசா தோட்ட லயன் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதனால் இக்குடியிருப்பில் இருந்த ஐந்து பேர் லூசா தோட்ட சிறுவர் பராமறிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ் அனர்த்தம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வீதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இயந்திரங்களின் அதிர்வினாலேயே இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.
இவர்களுக்கான உலர்வுணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றபோதிலும், பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்தார் இதுவரையிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் சேதம் விளைவித்த குடியிருப்புக்கும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக கவனம் செலுத்தி தங்களுடைய குடியிருப்பை உடனடியாக திருத்தி தருமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தற்காலிகமாக தங்கியிருக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையம் முற்றிலும் பழுதடைந்து காணப்படுகின்றமையால் தற்போது பெய்து வரும் அடை மழையினால் சிறுவர் பராமறிப்பு நிலையம் முழுவதும் மழை நீர் நிரம்பி காணப்படுவதால் சமைத்து உண்ண முடியாமலும் நித்திரை கொள்ள முடியாமலும் சிரமப்படுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago