Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

நானுஒயா, நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும். அதன் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.
'ஆரோக்கியமான வாழ்வுக்குப் போசாக்கான உணவு' எனும் தொனிப்பொருளில் மத்திய மாகாண விவசாய கைத்தொழில் பண்ணை வளர்ப்பு சுற்றாடல் அமைச்சின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மலையக விவசாய மற்றும் விலங்கு வளக் கண்காட்சி 2016' எனும் கண்காட்சி, நேற்று (18) நுவரெலியா மாநகர சபை விளையாட்டு உள்ளரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து பேசியவர்,
'ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட ரயில் பாதை காரணமாக எமது பெருந்தோட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலமாக எமது நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மேலும், நாம் எமது நாட்டிலும் பல அபிவிருத்தித் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
எனவே, இதனை கருத்தில்கொண்டு மீண்டும் நானுஓயாவில் இருந்து நுவரெலியா ஊடாக இராகலை வரை கடந்த காலங்களில் சென்ற ரயில் பாதையை அபிவிருத்தி செய்து புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறு அம்முயற்சி சாத்தியப்படுமேயானால், அதன் மூலமாக பெருந்தோட்டத்துறையையும் விவசாயம் சுற்றுலா ஆகிய துறைகளை மிகவும் இலகுவாக அபிவிருத்தி செய்ய முடியும். எனவே அதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கனவுத்திட்டமான விவசாய அபிவிருத்தி மூலம் குறிப்பாக நச்சுத்தனைமை அற்ற விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் எமது நாட்டின் விவசாய துறையை மே;ம்படுத்துவதுடன், எமது மக்களுக்காக நச்சுத்தனைமை அற்ற விவசாய உற்பத்திகளை உற்கொள்ய முடியும். அதன்மூலமாக நோய்களை கட்டுப்படுத்தி சிறந்த ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்க முடியும்.
மத்திய மாகாண சபை அமைச்சர் ரமேஸ்வரனைப் போல ஏனைய மாகாண விவசாய அமைச்சர்களும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரும் பட்சத்தில், விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வது என்பது மிகவும் எளிதான ஒரு காரியமாக அமையும் என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago