Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுகொடுக்காவிட்டால் தீக்குளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்தார்.
உடனடியாக நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படாது. சூட்டோடு சூடாக ஆற்றும் காரியம் நன்மையளிக்கலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். எவர் இருந்தாலும் மறைந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
சம்பள பிரச்சினை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
'பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பகீரத பிரயத்தனத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றது. பெரும் இழுபறியிலுள்ள இந்த பிரச்சினைக்கு அனைத்து தரப்பாலும் ஏற்கக் கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கு இதுவரை பல பேச்சுவார்த்தைகளில் இ.தொ.கா பங்கு பற்றியுள்ளது.
அதேவேளை, சுமூகமான முடிவை எட்டுவதற்கு பல முட்டுக்கட்டைகளை இ.தொ.கா சந்தித்துள்ளது. எனினும், தனது முயற்சியை கைவிடவோ அதில் தளர்ச்சியடையவோ இல்லை.
இச்சமயத்தில் பல தொழிற்சங்கங்கள் குட்டையை குழப்பும் விதமாக பொறுப்பற்ற வார்த்தைகளை கொட்டி வருகின்றன. இது சுமூக நிலைக்கு குந்தகமாக அமைந்து விடும் என்பதை இத்தொழிற்சங்கங்கள் கருதவில்லை.
இச்சமயத்தில் 10 நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளார். இந்தப் பிரச்சினை அவரது தனிப்பட்ட பிரச்சினையல்ல. அவர் சார்ந்த கட்சிக்குரிய தனிப்பிரச்சனையும் அல்ல.
ஒட்டுமொத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தொழிற்சங்கங்களுக்குரிய தவிர்க்க முடியாத விட்டுக்கொடுக்க முடியாத ஒரு பிரச்சினையாகும்.
இதில் தனி நபரொருவர் தீக்குளிக்கப் போகிறார் என்பது சிறுபிள்ளைதனமானதாகும். தனிநபர் தனது புகழை உயர்த்திக்கொள்ள தீக்குளிக்க நினைத்தால் அதை எவராலும் தடுத்து, நிறுத்திவிடவும் முடியாது, நியாயப்படுத்தவும் இயலாது' என்றார்.
35 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago