Kogilavani / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, பா.திருஞானம், மொஹொமட் ஆஸிக்
பூண்டுலோய மற்றும் பேராதனை கலஹா வீதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
பூண்டுலோயா நகரில் திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 47 வயதுடைய எ.டபிள்யு.ஜி.உதயணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நுவரெலியாவிலுள்ள வங்கியொன்றில் கடமையாற்றிவரும் இவர், நுவரெலியா செல்வதற்கு பஸ்ஸில் ஏறுவதற்காக, வீதியை கடக்க முயன்றபோது தலவாக்கலையிலிருந்து வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம், தற்போது பிரேத பரிசோதனைக்காக பூண்டுலோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பேராதனை கலஹ வீதியில், ஞாயிற்றுக்கிழமை (25) மாலை 5.30 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில், பேராதனை பல்கலைக்கழக மாணவனொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இரத்தினபுரியை சேர்ந்த, கசுன் புத்திக்க சொய்சா (வயது 23) என்ற மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். மேற்படி மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த மணல்லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .