Editorial / 2018 மார்ச் 07 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ்.சதிஸ், ஆர்.ரமேஸ்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்திலிருந்து, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலத்தை, செவ்வாய்க்கிழமை (6) இரவு மீட்டதாக தெரிவித்த பொலிஸார், இவ்வாறு மீட்கப்பட்டவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பத்தனை, கிரேக்லி தோட்டத் தொழிற்சாலையில், உதவி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த எஸ்.திருச்செல்வம் (வயது 38) என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வழமைபோன்று செவ்வாய்க்கிழமை (6) வேலைக்குச் சென்றுள்ள அவர், மாலை 9 மணி ஆகியும் வீடு திரும்பாமல் இருந்ததால், உறவினர்கள் அவரைத் தேடி சென்றதாகவும் இதன்போது அவர், வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவிலுள்ள தோட்டத்தில் சடலமாகக் கிடந்ததாகவும் உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துjனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026