Kogilavani / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாத்தளை, உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர், கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளாரென, பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்த மஹேஷ் வில்பத் ஏக்கநாயக்க (வயது 38) என்பவரே, இவ்வாறு காணாமற்போயுள்ளார்.
மாத்தளை, உக்குவளை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் இருந்து கட்டுகஸ்தோட்டைக்கு, கடந்த 15ஆம் திகதி இரவு, காரில் பயணித்த அவர், செவ்வாய்க்கிழமை வரை வீடு திரும்பவில்லை என்று முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர் பயணித்த காரை, கட்டுகஸ்தோட்டை பழைய பாலத்திலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நபர் பயன்படுத்திய அலைபேசி என்பவற்றை, காரிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
எனினும், இவர் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவலும் இல்லை என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026