2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் 865 குடும்பங்கள் பாதிப்பு

Sudharshini   / 2016 மே 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக இதுவரை 825 பேர் பாதிப்புக்குள்ளகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.எம்.என்.பி.பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 'இரத்தினபுரி மாவட்டத்தில் 08 பிரதேச செயலகப் பிரிவுகளில் 865 குடும்பங்கள், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்;. இதில் 203 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில்; தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர்; உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இரத்தினபுரி, பலாங்கொடை, பெல்மதுளை, எஹலியகொடை, கிரியெல்ல, கொலன்ன, குருவிட்ட, காவத்தை ஆகிய 08 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பம்பரகொடுவ பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவில் பெட்டிகலை தோட்டத்தில் 26 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டள்ளனர்.

இதேவேளை, பெல்மதுளை பிரதேச செயலகப்பிரிவில் 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இயலபோபிட்டிய வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டள்ளனர். கொலன்ன பிரதேச செயலகப்பிரிவில் 80 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் எக்பத் வித்தியாலயம் மற்றும் புலுதொட்ட வித்தியாலம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டார்.

'எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் புலுகாபிட்டிய, வியலகொடை, பாலகம, திவுரும்பிடிய, கெடஎத்த, பலிகல ஆகிய பகுதிகளில் 163 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். காவத்தை பிரதேச செயலகப்பிரிவில் 3 குடும்பங்கள் பாதிக்கப்பட நிலையில், அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தள்ளனர். குருவிட்ட பிரதேச செயலகப்பிரிவில் பாலகம, ஓவிட்டிகம, கந்தான்கொடை, குருவிட்ட ஆகிய பகுதிகளில் 201 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் முதுங்கொட்டவ, தேஹரகொட, எல்லாவெல மாட்டுவாகல ஆகிய பகுதிகளில் 3 குடும்பங்கள் வெள்ளத்தனால் பாதிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது' என்றார்.

'மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. இது குறித்த விவரங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளன' என மேலும் தெரிவித்தார்.

'இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, பலாங்கொடை, எஹலியகொடை, கிரியெல்ல, அயகம, இம்புல்பே ஆகிய ஆறு பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

மேற்படி மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.எம்.என்.பி.பண்டார மேலும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .