2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை

Sudharshini   / 2016 மே 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைவடைந்துள்ளபோதிலும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக காவத்தை, நிவித்திகலை, கிரியெல்ல, கொலன்ன, எஹலியகொடை, குருவிட்ட, பலாங்கொடை, நிவித்திகலை, எலபாத்த ஆகிய நகரை அண்மித்த பகுதிகளில் இன்று (22) வானம் மப்பும் மந்தாரமாக காணப்படுவதுடன் பல பிரதேசங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 6,698 பேர், அப்பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் மத்திய நிலையங்களில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

மேலும், காவத்தை பொரோணுவ தோட்ட மேற்பிரில் இன்று(22) அதிகாலை பலத்த காற்று மழை பெய்ததால் 34 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவு பொருட்கள் அனைத்தும் சப்ரகமுவ மாகாண சபை மற்றும் மாவட்டத்திலுள்ள அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .