Editorial / 2020 மே 31 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இரண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களை விரைவில் திறந்து வைப்பதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட கூட்டுறவுச் சங்கத் தலைவர்களுடனான கலந்துரையாடல் சமீபத்தில் இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் தங்களது விவசாயப் பயிர், பழவகைகளை வழங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்குத் தேவையான நிதி, அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றும் இவற்றில், நுகர்வோர் மிகவும் மலிவான விலைகளில் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago