2025 மே 08, வியாழக்கிழமை

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

Gavitha   / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் தேசிய கட்டடய ஆராச்சி நிலைய அதிகாரிகள், இன்று (04) தெரிவித்தனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, எஹலியகொடை, இரத்தினபுரி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின ருவன்வல்ல பிரதேசச் செயலகப் பிரிவிலும் உள்ள மலைப்பாங்கான பகுதிகளுக்கே, இந்த மண்சரிவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அடையாளம் காணப்பட்ட இப்பிரதேசங்களில் வாழும் மக்களும் மண்சரிவுக்கான அபாயம் இருப்பின், அவ்வாறன பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களில் தற்போதைக்கு தங்கியிருக்குமாறு, இது குறத்து கிராம சேவகர்கள அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X