சிவாணி ஸ்ரீ / 2020 மே 26 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில், 100 வயதை அடைந்த சிரேஷ்ட முதியோர்கள், 46 பேர் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்யப்பட்டு வருவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் 100 வயதை அடைந்த சிரேஷ்ட முதியோர்களை இணங்கண்டு, அவர்களுக்கு உதவி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, சப்ரகமுவ மாகாண சபை கட்டடத் தொகுதியில், இன்று (26) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் 26 முதியோர்களும் கேகாலை மாவட்டத்தில் 20 முதியோர்களும் மொத்தம் 46 பேர் வாழ்ந்து வருவதாகவும் இதில் அதிகமான முதியோர்கள் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகபொல பிரதேச செயலகப் பிரிவிலும் கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல பிரதேச செயலகப் பிரிவிலும் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவிலும் கேகாலை மாவட்டத்தில் புலோத்கோபிட்டிய பிரதேச செயலகப் பிரிவிலும் 100 வயதை அடைந்த ஒரு முதியவர்கூட இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேற்படி மாகாணத்தில் வாழும் 100 வயதை அடைந்த சிரேஷ்ட முதியோர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதைத் தவிர வைத்திய தேவைகளுக்கான கொடுப்பனவு, அரச நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026