2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தலைதூக்கும் அபாயம்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாகவும் எதிர்வரும் காலப் பகுதிகளில் இந்நிலைமை பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இரத்தினபுரி மாவட்டத் தொற்று நோய் பிரிவின் வைத்திய அதிகாரி லக்மான் கோணார இன்று (28) தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, பலாங்கொடை, எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்நிலைமை, ஏனைய பிரதேசங்களை விட தீவிரமடைந்து வருவதாகவும் எதிர்காலத்தில் இந்நிலமை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதி வரை இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 480 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது என்றும் கொவிட்-19 காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தால் கவனிப்பாரற்று இருந்த பகுதிகளில் தேங்கியுள்ள நீர் காரணமாகவே டெங்கு நோய் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .