Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 15 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரி மாவட்டத்தில், இது வரை கண்டறியப்பட்ட 116 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில், 30 பேர் குணமடைந்து, தத்தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என, இரத்தினபுரி மாவட்டதொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்தியர் லக்மால் கோனார தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் தொடர்ந்து 14 நாளகளுக்கு தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் இருப்பர் என்றும்இவர்களை பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தினசரி கண்காணிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அயகம சுகாதார பிரிவு மிகவும் அவதான வலயமாக உள்ளது என்றும் ஹொரண பொடிலயின் ஆடைத்தொழிற்சாலையில் கடமைப்புரிந்த பெரும் எண்ணிக்கையானவர்கள், இந்த சுகாதாரப்பிவில் இருப்பதால், அயகம பிரிவு அவதானப்பகுதியாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago