2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இரத்தினபுரியில் 8 மாதங்களில் 350 டெங்கு நோயாளர்கள்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து கடந்த எட்டு மாத காலத்தில் டெங்கு நோயாளர்கள் 350 பேர் பதிவாகி உள்ளனர் என, இரத்தினபுரி மாநகர சபையின் பிரதான பொது சுகாதார பரிசோதகர் எஸ்.எம்.யு.பி.சமரசேகர தெரிவித்தார். 

நேற்றைய தினம்(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

 இரத்தினபுரி மாநகர சபைக்குட்பட்ட 15 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகிவுள்ளனர். இதில்  முவகமுவ மற்றும் இரத்தினபுரி நகரின் வடக்கு ஆகிய இரு பிரதேசங்களில் கூடுதலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது என்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு நோயாளர்கள் 84 பேர் மாத்திரமே பதிவாகி இருந்த நிலையில், . 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை கடந்த எட்டு மாத காலத்தில் 350 டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாவும் மற்றும் அடிக்கடி இப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படுவதன் காரணத்தாலும் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது என்றார்.

டெங்கு நோயை கட்டுப்படுத்தவதற்காக  இரத்தினபுரி மாநாகர சபை மேயர் டிரோன் அத்தநாயக்கவின் ஆலாசனைக்கமைய, வீடுகள் மற்றும் பொது இடங்களுக்குச் சென்று மக்களை தெளிபடுத்தி, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X