2025 மே 07, புதன்கிழமை

இரத்தினபுரியில் கொரோனா தீவிரம்

Gavitha   / 2020 நவம்பர் 10 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருப்பதாகவும் எனவே, பொதுமக்கள் அனைவரும் சுகாதாரப் பரிந்துரைகளை மிகவும் கடுமையாகக் கடைபிடிக்கவேண்டும் என்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி போத்தாகம தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில், இதுவரைக்கும் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் 1,668 குடும்பங்களைச் சேர்ந்த 5,316 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரத்தினபுரி, பேருவலை, பேலியகொட ஆகிய பகுதிகளிலுள்ள மீன் விற்பனையாளர்களுடன் தொடர்புடைய 1,801 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்னர் என்றும் ஆடைத் தொழிற்சாலையொன்றின் 5 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிற மாவட்டங்களில் இருந்து இரத்தினபுரி மாவட்டத்துக்குள் வருகை தந்த 2,360 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X