2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இரவிலிருந்து வரிசை

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால்  இன்றைய தினம் ஹட்டன் நகரிலுள்ள முகவர் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நேற்று (11) இரவிலிருந்தே மக்கள் காத்திருக்கத் தொடங்கியிருந்தனர்.

ஹட்டன் நகரிலுள்ள 4 முகவர் நிலையங்களுக்கு லிட்ரோ நிறுவனத்தால் 400 சிலிண்டர்களே விநியோகிக்கப்பட்ட நிலையில், அதனைப் பெற்றுக்கொள்வதற்காக 1000 கணக்கான மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர்.

இதற்கமைய இன்று காலை தொடக்கம் ஹட்டன் பொலிஸாரின் தலையீட்டுடன் டோக்கன் விநியோகிக்கப்பட்டு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X