2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இறுதிக் கிரியை அன்று மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

ஆ.ரமேஸ்   / 2020 மே 28 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மது விற்பனை நிலையங்களை பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிக் கிரியைகளுக்கு, மலையகத்திலுள்ள பெருந்தோட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொ்ளவுள்ளனர்.

அத்துடன்  அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியை நிகழ்வுகளை தேசிய தொலைக் காட்சிகளில் நேரடி ஒலிபரப்பு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .