Kogilavani / 2016 ஜூன் 01 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பெண்ணொருவரிடமிருந்து 15,000 ரூபாயை இலஞ்சமாக வாங்கிய கிராமசேவகரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று(31) மாலை கைதுசெய்துள்ளனர்.
கண்டி, உடுநுவரை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக வதிவிடப்பத்திரம் மற்றும் குடும்ப விவகாரம் தொடர்பான அறிக்கையை தயாரித்து தருமாறு மேற்படி கிராம அதிகாரியிடம் கோரியபோது, அவர் அப்பெண்ணிடம் 15,000 ரூபாயை இலஞ்சமாகக் தருமாறு கூறியுள்ளார்.
அப்பெண், பணத்தை வழங்க முற்பட்டப்போதே கிராம அதிகாரிகயை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago