R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றுக்காக முறைப்பாட்டு தரப்பினரிடமிருந்து 20,000 ரூபாய் இலஞ்சப் பணம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று ( 17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் காணாமல் போன வங்கி அட்டை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தி, சட்ட நடவடிக்கையை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்து, முறைபாட்டு தரப்பினரிடம் இருந்து 50,000 ரூபாயை சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் கோரியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவினரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இலஞ்சம் கோரிய தரப்பிடமிருந்து 20,000 ரூபாயைப் சார்ஜன்ட் பெற்றுக்கொண்ட போதே, அவர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025