Sudharshini / 2016 ஜூன் 27 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா
க.பொ.த.(உ/த) பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருக்கும் கலை, வர்த்தக, தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு, எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் ஜூன் 15ஆம் திகதி வரை நுவரெலியா நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
நுவரெலியா Science & Acadamy, நுவரெலியா வலய கல்விக் காரியாலயம் மற்றும் நுவரெலியா இந்து கலாசார பேரவை ஆகியன இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த இலவசக் கல்விக் கருத்தரங்கானது, மு.ப. 8.30 மணி தொடக்கம் பி.ப 4 .30 மணி வரை நடைபெறவுள்ளது. அனுபவமிக்கவர்களால் நடத்தப்படவுள்ளதோடு வருகை தரும் மாணவர்களுக்கு இலவச கையேடுகளும் வழங்கப்படவுள்ளன.
க.பொ.த.(உ/த) பரீட்சையில், மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச கல்வி கருத்தரங்கில் நுவரெலியா, கொத்தமலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலதிக விவரங்களுக்கு ஆசிரியர் யோகேஸ்வரனை (0712191999) தொடர்புக்கொள்ளவும்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026