2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இளைஞனை காணவில்லை

Sudharshini   / 2016 மே 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

மஹியங்கனை, மாபாகட, மெத ஓயாப் பகுதியைச் சேர்ந்த டி.எம். புத்திக சந்தருவன் திசாநாயக்க (வயது 18) என்ற இளைஞனை, கடந்த 11ஆம் திகதியிலிருந்து காணவில்லையென, குறித்த இளைஞனின் தந்;தையால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்துவிட்டு அங்கு சம்பளம் குறைவாக கிடைக்கின்றமையால், நண்பர்களுடன் இணைந்து கொங்ரீட் போடும் வேலைக்;குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 11ஆம் திகதி வேலை முடிந்து தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இடையில் வயிற்றுவலி எனக் கூறி அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் சென்ற அவ்விளைஞன், திரும்பி வராததையடுத்து, இவ்விடயம் தொடர்பில் இளைஞனின் தந்தைக்கு அலைபேசி மூலம் தகவல் வழங்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதிக்கு பின்னர் தனது மகன் குறித்து எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .