2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இளைஞர் சமூகம் இன்று மதுவுக்கும் புகைத்தலுக்கும் அடிமையாகி வருகின்றது

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

விளையாட்டு துறையில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை பேணும்  இளைஞர் சமூகம் இன்று மதுவுக்கும் புகைத்தலுக்கும் அடிமையாகி வருகின்றது என அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுவர்கள் மத்தியில் அதிகமான திறமைகள் உள்ளன. இதனை இனங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தவேண்டிய கட்டாய தேவை தற்போது உள்ளது.

மலையக பகுதிகளில் இளைஞர்கள் ஏற்பாடு செய்து நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் மதுபாவித்து விட்டு விளையாடுவதுடன், மைதானத்தில் புகைப்பிடிப்பதையும் கடைபிடிக்கின்றனர்.

இவர்கள் மைதானத்தில் சிறுவர்கள் பெரியோர்கள் இருப்பதை கூட நினைப்பதில்லை இதன் காரணமாக சிறுவர்களும் இப்பழக்கத்தினை இலகுவாக் பழகிகொள்கின்றனர்.
 
பெரியோர்கள் கற்றுவந்ததை இந் நவீன காலத்தில் தொடராமல்  இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்களில் ஈடுபடாமலும்  சிறுவர்களை ஈடுபடுத்தாமலும் தடுப்பது அனைவறாலும் மதிக்கதக்க ஒன்றாகும்.

எனது பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் தவறான முறையில் நடந்துகொள்கின்றனர். கடந்த காலங்களில் சில மாணவர்களை பரிசோதனை மேற்கொண்டபோது, இவர்களிடம் புகைத்தல் பொருட்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இச்செயல் நம்பியிருக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் அவப்பேரை தோற்றியுள்ளது. மாணவர்கள் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வேண்டிக்கொள்கிறேன்.

பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகவே கல்விக்காக அதிகமான பணத்தினை செலவு செய்கின்றார்கள். எனவே, இதனை நல்லமுறையில் பயன்படுத்திகொள்கின்றார்களா என்பததை கவனிக்க வேண்டிய பொறுப்பும் நம்பிகொடுக்கும் பணத்தை நாம் சரியான விடயத்துக்கு செலவுசெய்கின்றோமா என்பதை இருபாலாரும் சிந்திக்கவேண்டும்.

எதிர்காலத்தில் இளைஞர்கள் தவறான முறையில் நடக்கும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .