Kogilavani / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
பிரதான கட்சிகளின் அரசியலுக்குள் சிக்கிக் கொண்டிருந்த இளையோர் சமூகம், இன்று விழித்துக்கொண்டதாகவும் இது பாராட்டத்தக்க விடயமாகுமென்றும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்லில் போட்டியிடுவதற்காக, இளைஞர், யுவதிகளே அதிகமாகக் களமிறங்கவுள்ளனர் என்றும், இது இலங்கை அரசியலில், முன்னேற்றத்தையே பிரதிபலிக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மாத்தளை மாவட்டத்தில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகமான இளைஞர், யுவதிகள் முன்வந்துள்ளனரென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“இவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பிரதான கட்சிகளின் ஊடாகவே போட்டியிடவுள்ளனர்.
“வழமைக்கு மாறாக, இளைஞர், யுவதிகளுக்கு பிரதான கட்சிகளும் வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மூத்த அரசியல்வாதிகளுக்கே சந்தர்ப்பம் வழங்கி வந்த அரசியல் கட்சிகள், இளையோர் சமூகத்துக்கும் இன்று முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
35 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
8 hours ago