2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

இவ்வருடத்தில் 1,270 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

Sudharshini   / 2016 ஜனவரி 24 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ்

மலையகத்திலுள்ள ஒவ்வொரு தோட்டத்துக்கும் 25 - 30 வீடுகள் என்ற அடிப்படையில், இவ்வருடத்தில் மாத்திரம் 1,270 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஇராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், மலையகத்தில் 4000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டு உள்ளதெனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

டயகமை, சந்திரிகாமம் தோட்டத்தில் 25 வீடுகளை கொண்ட புதிய கிராமத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டத்தை, நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக செயற்படுத்தி வருகின்றது. 2016ஆம் ஆண்டில் இரண்டு புதிய கிராமங்கள் அமைக்கும் திட்டம், தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் செயற்படுத்தப்படவுள்ளது' என்றார்.

'எதிர்வரும் 30ஆம் திகதியன்று, அக்கரப்பத்தனை - பங்கட்டன் தோட்டத்திலும் 31ஆம் திகதி பொகவந்தலாவையிலும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்படவுள்ளது' எனவும் அவர் கூறினார்.

'தோட்டப் பகுதிகளில் வீடில்லாப் பிரச்சினை அதிகமாக காணப்படுவதால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவியுடனும்; வங்கி கடனினூடாக காணி அதிகாரத்துடன் சுமார் 5 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தொழிலாளர்களே தமது வீட்டை நிர்மாணித்துக்கொள்ளும் வாய்ப்பை மலையக மக்கள் முன்னணி உருவாக்கியுள்ளது. 

இவ்வீடமைப்புக்கு, வங்கிக் கடனாக 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதுடன் தேசிய வீடமைப்பு அதிகார சபை 1 இலட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கவுள்ளது. இதேவேளை, கூரை வேலைகளுக்காக தோட்டங்களில் விற்பனை செய்யப்படும் மரங்களை தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இத்தொகை சமமாக்கப்படும்' என அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .