Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஈஸிகேஸ் முறை மூலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுப்பட்ட ஒருவர், இராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய சந்தேகநபர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், லிந்துலை -ஹென்போல்ட் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தான், டயலொக் கம்பனியில் வேலை செய்வதாகத் தெரிவித்து, கையடக்க தொலைபேசியில் இராகலை கோனப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடன், இரண்டு வாரத்திற்கு முன் தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது, டயலொக் வாடிக்கையாளரான தங்களுக்கு பணப் பரிசு கிடைக்கப்பட்டுள்ளது இப் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள ஓர் இலட்சம் ரூபாவை ஈஸி கேஸ் மூலம் அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் ஈஸி கேஸ் மூலமாக பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இறுதியில் பரிசும் கிடைக்கவில்லை. சந்தேகநபரின் தொலைபேசியும் இயங்கவில்லை என தெரிவித்து, பாதிக்கப்பட்டவர் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் தனக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு டயலொக் நிறுவனத்தில் தொழில் வழங்கப்பட்டுள்ளது என கூறி, பாதிக்கப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை வழங்கி, பண பரிசு கிடைத்துள்ளது அதை பெற இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை ஈஸி கேஸ் மூலம் அனுப்பும்படி அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டதால், தான் இதை அறிவித்து ஈஸி கேஸ் மூலம் அனுப்பிய பணத்தை பெற்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஒரு சிறிய தொகை தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தும் இராகலை பொலிஸார், சந்தேகநபரை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
18 May 2025