2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமையால் 13 பேர் வைத்தியசாலையில்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

திருமணவீட்டில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 13 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பொகவந்தலாவ - மோரா தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நான்கு சிறுவர்களும் மூன்று பெண்களும் ஆறு ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு சமைத்த உணவை இன்று காலை உட்கொண்டபோது வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.

கோழி இறைச்சி உட்கொண்டமையினால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .