2025 மே 03, சனிக்கிழமை

உணவகங்களில் திடீர் பரிசோதனை

Mayu   / 2024 ஜூன் 09 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை லிந்துலை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களை பொது சுகாதார அதிகாரிகள்  குழுவொன்று திடீர் சோதனை நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை (9)  மேற்கொண்டிருந்தனர்.

லிந்துலை, மெராயா, இல்டன்ஹோல், நாகசேனை, ஹோல்புறூக், மன்ராசி, அக்கரப்பத்தனை, டயகம போன்ற நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், பழுதடைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 38 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் பழுதடைந்த நுகர்வு பொருட்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ரெய்ஷினி தலைமையில் ஹங்குரான்கெத்த, மத்துரட்ட, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை, கொட்டகலை, அம்பகமுவ, பொகவந்தலாவ, மஸ்கெலியா மற்றும் நவ திஸ்பனை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பணிபுரியும் 35 பொது சுகாதார அதிகாரிகள்  மற்றும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர்  ஒருங்கிணைந்து இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X