2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவு நெருக்கடியை எதிர்கொள்ள பெருந்தோட்ட கம்பனிகள் விசேட நடவடிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPCs) தமது நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அதிகரிக்க புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு தமது ஊழியர்களுக்கு விசேட ஆதரவை வழங்கி வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, “இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூன்று வேளை உணவு கூட கிடைக்காத குடும்பங்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது.

 RPCகளாகிய நாங்கள் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை மிகுந்த நிலையை உணர்ந்தோம். இந்தச் சூழலைப் எதிர்கொள்வதற்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது இந்த நேரத்தில் அனைத்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கடமை என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

"தோட்டங்களில் உள்ள மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதன் மூலம், வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்கும் இந்த தேசிய முயற்சிக்கு எங்களால் இயன்றதைச் செய்வதை RPCகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

உணவு மற்றும் அத்தியாவசிய உலர் உணவுகளை விநியோகித்தல் மற்றும் சத்தான உணவை வழங்குவதற்காக சமூக சமையலறைகளை அமைப்பதன் மூலம் உணவு விலைகளின் உச்ச அளவிலான அதிகரிப்பின் தாக்கத்திலிருந்து எங்கள் தொழிலாளர்களை பாதுகாக்க RPCகள் தொடர்ச்சியான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.” என இராஜதுரை மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X