2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நோட்டன்பிரிட்ஜ், கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில், உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலத்தை, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார், இன்று புதன்கிழமை காலை மீட்டனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான ராஜபக்ஷ முதியன்சலாகே குசுமாவத்தி (வயது 79) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீடொன்றில் தன்னந்தனியாக வசித்து வந்த இவர், கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக, வயோதிபக் கொடுப்பனவைப் பெறுவதற்கு வராததன் காரணமாக, உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அவரை  தேடிப் பார்த்தபோதே, அவர் கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகத்  தெரிவித்துள்ளனர்.

பின்னர் இதுத் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா என்பதுத் தொடர்பாக நோட்டன் பொலிஸாரும் ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து, புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .