2025 மே 19, திங்கட்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோட்ட இளைஞர், யுவதிகளுக்கே வாய்ப்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அந்தந்த தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

மஸ்கெலியா சாமிமலை- மாக்கலை தோட்டத்தில் இரவு, பகல் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாற தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டில் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என தெரியவந்துள்ளது. அந்த தேர்தலில் பிரதேச மக்களை உள்ளடக்கிய தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகளை போட்டியிட செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் பாரியளவில் வாக்குகளை அளித்து எங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட அரசாங்கத்தில் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடியாத அந்த அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். எதிர்காலத்தில் நாடு நல்ல ஒரு முன்னேற்றம் அடையும். அதன்போது மக்கள் எதிர்பாரக்கும் அபிவிருத்திகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X