2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஊவாக்கலையில் மண்சரிவு அபாயம்: 10 குடும்பங்கள் வெளியேற்றம்

Sudharshini   / 2016 மே 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், எஸ்.சுஜிதா

தலவாக்கலை, லிந்துலை ஊவாக்கலை 3ஆம் இலக்க தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் வெளியேற்றப்பட்டு, தோட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (20)  மாலை பெய்த கடும் மழையினால் 10 வீடுகளை கொண்ட லயன் தொகுதிக்கு முன்னால் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால், இக்குடியிருப்பு பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு  இயற்கை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நுவரெலியா பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் பணித்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையால் இக்குடியிருப்பு பகுதிக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்த போதிலும் அதிகாரிகள் இவர்களுக்கான எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால் தொடர்ச்சியாக இம்மக்கள் அச்சத்துடன் இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடாகவும், இராணுவ படையினர் மூலம் கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர்களுக்கான உணவு பொருட்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக கிராம சேவகர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

இக்கூடாரங்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக இருப்பதனால் பால்மா மற்றும் ஏனைய பொருட்கள் தேவைப்படுகின்றதென  மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .