Sudharshini / 2016 ஜனவரி 26 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண இளைஞர் விவகார விளையாட்டுத்துறை, நெசவு கைத்தொழில் மற்றும் உல்லாசத்துறை அமைச்சின்; செயலாளரை (வயது 56), பதுளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைதுசெய்துள்ளனர்.
மேற்படி நபர் பதுளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்;.
ஊவா மாகாண சபை திணைக்களமொன்றில் கணினி வடிவமைப்பு பிரிவில் சேவையாற்றி வந்த திருமணமான (28) பெண்ணொருவர், மேற்படி செயலாளர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்பதை அறிந்த செயலாளர், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையிலே அங்குச் சென்ற பொலிஸார் அவரை கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago