Kogilavani / 2016 ஜூன் 21 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்தில் உள்ள சுமார் 865 பாடசாலைகளிலும் நிலவும் பௌதிக வளப் பற்றாக்குறைகளை இனங்கண்டு, அவற்றை நிவர்த்தி செய்து, பாடசாலைகளை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
'இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாணத்தின் 865 பாடசாலைகளிலும் நிலவும் வளப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை, மேலதிக ஆசிரியர் ஆகிய விவரங்களை சேகரித்து வருகின்றார்' என்றும் அவர் கூறினார்.
'இக்குறைபாடுகள் தொடர்பான விவரங்கள் கிடைத்தவுடன், மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, அவற்றை திறமான பாடசாலைகளாக மாற்றி, அதிசிறந்த கல்வியை மாணவர்களுக்கு புகட்டி, அதிசிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது குறிக்கோள்' என்று அவர் கூறினார்.
இதேவேளை, ஊவா மாகாணத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளை, பாதுகாப்பான இடங்களில் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடலும்;, நேற்று (20) மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளை பாதுகாப்பான இடங்களில் அமைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.


7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026