Sudharshini / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (22) நடைபெற்றபோதும் சபையில் ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிவரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் ஏ.எம்.புத்ததாச தலைமையில் இன்று (22) காலை 10 மணிக்கு ஊவா மாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பமானது.
இதன்போது சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த விஜயரத்ன, 'முதலமைச்சர் உள்ளிட்ட ஏனைய நான்கு அமைச்சர்களும் இல்லாத நிலையில், எவ்வகையில் சபை அமர்வை முன்னெடுக்க முடியும். மாகாண அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படாமையினால், ஊவா மாகாண சபை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மாகாண அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கான காரணம் என்ன? ஊவா மாகாண சபை கேளிக்கைக்கு உரிய சபையாக மாறிவிட்டது' என்று கூறினார்.
இதன்பின்னர், சபையின் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்று சபையில் அமளிதுமளியும் ஏற்பட்டது. நிலைமையைக் கருத்திற்கொண்டு சபை முதல்வர், அமர்வை பதினைந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
சபை அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22.10.2015 இல் 9.30.மணி முதல் மாலை 4 மணிவரையும், 23.10.2015 முற்பகல் 9.30 மணி முதல் மாலை 4 மணிவரையும் அமர்வுகள் இடம்பெறுமென்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் பதினைந்து நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டு பின், எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026