Sudharshini / 2016 ஜனவரி 28 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருடம் ஊவா மாகாண அஞ்சல் சேவையில் பதினான்கு கோடியே 40 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக, ஊவா மாகாண பிரதி அஞ்சல் துறை அதிபர் தர்மசிறி பியசேன தெரிவித்தார்.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் மூன்று அஞ்சல் அலுவலகங்கள், முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தரங்களையுடைய 43 அஞ்சல் அலுவலகங்கள், 251 உப அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவற்றின் கடந்த வருட சேவைகள் சிறப்பானதாக அமைந்ததினால், மேற்படி வருமானம் கிடைத்திருப்பதாக, ஊவா மாகாண பிரதி அஞ்சல் துறை அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,
'கடந்த 2012ம் ஆண்டு, ஊவா மாகாண பிரதி அஞ்சல் துறை அதிபராக நான் நியமனம் பெற்றதும், 'ஊவா அஞ்சல்துறை குடும்பம்' என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செயல்பட ஆரம்பித்தேன்.
இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சிறப்பான சேவை நிமித்தம் 2012ஆம் ஆண்டு பத்து கோடியே 94 இலட்சம் ரூபாய், 2013ஆம் ஆண்டு பன்னிரெண்டு கோடியே 56 இலட்சம் ரூபாய், 2014ஆம் ஆண்டு பதினான்கு கோடியே 28 இலட்சம் ரூபாய், 2015ஆம் ஆண்டு பதினான்கு கோடியே 40 இலட்சம் ரூபாய் என்ற வகையில் வருமான அதிகரிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது' என்று குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago