Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
ஊவா விஞ்ஞானக் கல்லூரி 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் பேர்சி சமரவீரவால் ஆரம்பிக்கப்பட்டதுடன், இங்கு தமிழ்ப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படுவதில் எனது நேரடி பங்களிப்பும் காணப்பட்டது. இவ்வித்தியாலயம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடனும், ஊவாவுக்கான கல்விமான்களை ஊவாவிலே உருவாக்கும் நோக்குடனும், உருவாக்கப்பட்டதென்று, ஊவா மாகாண சபை உறுப்பினர் முருகன் சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில், சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஆரம்பத்தில் இவ்வித்தியாலயத்துக்காக ஊவா மாகாணத்தை சார்ந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வருமானம் குறைந்த குடும்பங்களின் பிள்ளைகள் மாத்திரம் உள்வாங்கப்பட்டு, விடுதிகளில் தங்கவைக்கப்பட்டதுடன், 2003 ஆம் ஆண்டு முதல் மாணவர் அனுமதியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் உள்வாங்கப்பட்டு விடுதி வசதி தேவையானவர்களுக்கு மாத்திரம் அவ்வசதி வழங்கப்பட்டு ஏனையோர் வீடுகளில் இருந்து வந்து கற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஊவா விஞ்ஞானக் கல்லூரியின் ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 2001,2002ஆம் ஆண்டுகளில் க.பொ.த.(சா.த) பரீட்சையில் அதிசிறந்த பொறுபேறுகளை பெற்றதுடன், இம்மாணவர்கள் இன்று வைத்தியர்களாக, தாதியர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றி ஊவா மாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2003ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாணவர்கள் சிறந்த பொறுபேறுகளை பெற்று பல்கலைகழகம் சென்று இன்று சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் மிளிர்வதைக் காணக்கூடியதாக இருப்பது பெருமைக்குரிய விடயமாகும். அத்தோடு, வித்தியாலய மாணவர்கள் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், பல்வேறு துறைகளிலும் சிறந்த தேர்ச்சிகளை வெளிக்காட்டியுள்ளனர்.
ஊவா விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பத்தில் 97 மாணவர்களும் 08 ஆசிரியர்களும் நேர்முகப்பரீட்சைகள் மூலம் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்று இவ்வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலமான மாணவர்கள் 492 பேரும் தமிழ் மொழி மூலம் 230 பேரும் ஆங்கில மொழி மூலம் 176 மாணவர்களும் கல்விக் கற்று வருவதுடன், ஆசிரியர்கள் 74 பேரும் கடமையாற்றும் தரம் 6 முதல் தரம் 13 வரையான (விஞ்ஞான பிரிவு) வகுப்புகளை கொண்ட பாடசாலையாக காணப்படும்.
இவ் வித்தியாலயத்தில் அன்று ஆரம்பத்தில் காணப்பட்ட வளங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படாத நிலையில், இன்று கற்கும் மாணவர் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளன. அவ்வாறான குறைபாடுகளில் சில வருமாறு,
01. வித்தியாலயத்திற்கு இடவசதி போதியதாக இல்லாமை. ஆரம்ப முதல் பரிந்துரைக்கப்பட்ட வித்தியாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீதி அபிவிருத்திச் சபைக்கு சொந்தமாக நிலப்பகுதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02. தமிழ் மொழி மூலமான பரத நாட்டிய மற்றும், உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாக்கறையை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
03. விஞ்ஞான ஆய்வு கூடத்தின் மிகுதி கட்டிட மற்றும் உபகரண குறைபாடுகளை நிவர்த்தில் செய்யப்பட வேண்டும்.
04. வித்தியாலய்திற்கான பிரதான மண்டப தேவையை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
05. மண்சரிவிற்குள்ளாகியுள்ள வித்தியாலய சுற்று மதிலை புனர்நிர்மானம் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
06. 1997 முதல் புனரமைக்கப்படாத வித்தியாலய கட்டிடங்களை புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
07. வித்தியாலய மாணவர் அனுமதியின் போது அரசியல் தலையீட்டினை தவிர்த்து, சுற்று நிருபம், வித்தியாலய யாப்புக்கு அமைவாக மாணவர்களை அனுமதி நடைபெற வேண்டும்.
மேற்குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக கௌரவ முதலமைச்சர் அவர்கள் தங்களின் அவதானத்தை செலுத்தி, மாகாண சபையின் நேரடி கண்காணிப்பில் இப்பாடசாலையை இயங்கச் செய்வதன் மூலம் ஊவா மாகாணத்தின் எதிர்கால புத்திஜீவிகளை உருவாக்கும் முயற்சிக்கு உதவுமாறு கௌரவ சபையின் முன் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026