Kogilavani / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில், முதன் முறையாக மாணவர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
12 வருடகால வரலாற்றைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், மாணவர் அமைப்பு என்ற ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தில் எவ்விதப் போராட்டங்களோ, வகுப்புப் பகிஷ்கரிப்போ முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, பல்கலைக்கழக வரலாற்றில் முதற்றடவையாக, மாணவர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சுமார் 250 மாணவர்கள், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, கடந்தவாரம் பதுளை நகரில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026