2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

எச்சரிக்கைப் பதாதையில் கவனம் இழந்த சாரதி; மூவர் காயம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா

விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன் வைக்கப்பட்டிருந்த அபாய எச்சரிக்கைப் பதாதையில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம், பண்டாரவளை, எல்லதோட்டை என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது. 

பண்டாரவளைப் பொலிஸ் நிலைய அதிகாரிகளினால்  விபத்துகள் குறித்த அபாய எச்சரிக்கைப் பதாதைகள் வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விபத்துக்கள் குறித்து கவனமாக வாகனங்களைச் செலுத்துமாறு வாகன சாரதிகளிடம் பதாதைகள் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 

எனினும், மேற்குறிப்பிட்ட இடத்தில் பாதையை விட்டு விலகி கார் ஒன்று விபத்துள்ளாகியதாக பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளாகி பண்டாரவளை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் எனத் தெரிவித்த பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .