Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4,000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
எம்பிலிபிட்டிய பொதுவைத்தியசாலையின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் , நேற்று(11) மேற்படி வைத்தியசாலையின் கட்டடத்தொகுதியில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்தபோது அவரால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான விசேட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையிலேயே மேற்படி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வைத்தியசாலையில் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்கள் மட்;டுமின்றி மொனராகலை, ஹம்பந்தோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெருமெண்ணிக்கையான நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 1,000 இலட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை பிரிவும் 700 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு மாடி வாட்டுத் தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடத் தொகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி (15-08-2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன.
அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 3,700 மில்லியன் ரூபாய் செலவில் மேற்படி வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள ஐந்து மாடி கட்டடத்தொகுதிக்கான அபிவிருத்திப் பணிகளை, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ன' என்றார்.
'சப்ரகமுவ மாகாண சபையின் கீழியங்கும் வைத்தியசாலைகளுக்கு ஊவு ஸ்கேன் பரிசோதனை இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது' என அவர் மேலும் கூறினார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago