Kogilavani / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, ஹிதலென பிரதேசத்திலுள்ள எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திலிருந்து, எரிவாயு நிரப்பப்பட்ட 38 சிலிண்டர்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், 5 சந்தேகநபர்களை, இரத்தினபுரி பொலிஸார், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதுடன் சிலிண்டர்களையும் மீட்டுள்ளனர்.
மேற்படி நிலையத்திலிருந்து, 155,054 ரூபாய் பெறுமதியான 38 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயிருந்ததாக, இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட
பொலிஸார், மேற்படி ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி ஐவரும், குறித்த நிலையத்தில் பல வருடங்களாக தொழில்புரிந்து வருபவர்களெனவும் இவர்களில், எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026