2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

ஏ-5 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பம்

Sudharshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'பதுளை - செங்கலடிக்கு செல்லும் ஏ-5 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்' என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இது தொர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், 

'மேற்குறிப்பிட்ட ஏ-5 வீதியின் பாதையின் பதுளை-பிபிலை வரையான பெரும்பாதையை புனரமைக்கும் பணிகளை, வீதி அபிவிருத்தி அமைச்சுடன், ஊவா மாகாண சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளது. இப்பாதை புனரமைக்கப்பட்டதும் பதுளை மட்டுமன்றி, ஊவா மாகாணமே பொருளாதார துறையில் அபிவிருத்தி அடையுமென்பதில் சந்தேகமில்லை. வெகுவிரைவில், இப் பாதையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .