R.Maheshwary / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தெரணியகலை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 64 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையொன்றில் தொழில் செய்யும் குறித்த சிறுமியின் தாய், தொழிலுக்குச் செல்லும் போது, தனது மகளை அயல்வீட்டில் வசிக்கும் வயதான பெண்மனி ஒருவரிடம் விட்டுச் செல்வதாக தெரிவித்துள்ள தெரணியகலை பொலிஸார், குறித்த வயதான பெண்மணியின் வீட்டுக்கு வந்து செல்லும் நபர் ஒருவரே சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அயல்வீட்டு பெண்மணி செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .