2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஐந்தாண்டுத் திட்டத்தை தெளிவூட்டல்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்  

பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 5 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை,  அறிமுகப்படுத்தும் கூட்டம், அக்கரப்பத்தனை - கிளாஸ்கோ தோட்டத்தில் இயங்கிவரும் பிரஜாசக்தி நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்றது.

இத்திட்டம் தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றிய பிரிடோ வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே.சந்திரசேகரன், 'மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஐந்தாண்டு வேலைத் திட்டத்தை தயாரிப்பதற்காக, கள மட்டத்தில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

'இத்திட்டத்தில், பெருந்தோட்ட மக்கள் நில உடமையாளர்களாக  இருப்பார்கள். இதற்கூடாக தனிவீட்டுத் திட்டம், சுகாதார நடவடிக்கைகள், கல்வி, பொருளாதாரம் என பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு தேயிலைச் செடிகளை பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக முழு கவனம் செலுத்தப்படவுள்ளது' என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .