Sudharshini / 2016 மே 23 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து 1984ஆம் ஆண்டு வெளியான கலைப்பீட தமிழ்மொழி மாணவரின் ஒன்றுகூடல் திட்டமிட்டப்படி எதிர்வரும் 28ஆம்; திகதி நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
'நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக இந்த ஒன்றுகூடல் பிற்போடப்படலாமென சிலர் நினைத்திருக்கக் கூடும். ஒன்றுக்கூடலை பிற்போடுவதற்கான தேவை ஏற்படவில்லை. எனவே, திட்டமிட்டப்படி எதிர்வரும் 28ஆம் திகதி ஒன்றுகூடல் நடைபெறுமென' ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே, குறிப்பிட்ட கல்வியாண்டில் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த சகல தமிழ்மொழி மூல மாணவரும்; எதிர்வரும் 28ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பேராதனைப் பல்கலைக்கழக புவியியற்துறை கேட்போர்; கூடத்தில் இடம்பெறவுள்ள ஒன்று கூடலில் கலந்துகொள்ளும் படி ஏற்பாட்டுக் குழு சார்;பாக எம்.சம்சுதீன் கேட்டுக் கொண்டார்;.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago