Gavitha / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
“பல துளிகள் நீர் கலந்து ஓடையாக ஓடும் நீர், எத்தனை அசுத்தங்களை கொண்டிருந்தாலும், ஓடையில் ஓட ஓட சுத்தமாமும்” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, மலையக மக்களின் வாழ்வியல், பொண்ணியத்தின் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கி, மலையக இளம் சமூகத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓடை' எனும் குறும் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் காட்சி, எதிர்வரும் 28ஆம் திகதி, கொட்டக்கலை “கிரீன் ஹில்” ரீட்ரீயட் நிலையத்தில் திரையிடப்படவுள்ளது.
மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பில், ஐந்து மாதங்கள் நன்கு ஆராய்ந்து, இந்தக் குறுந்திரைப்படம் ஒலி,ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகாதேவன் தயாளன் என்ற நாடகக்கலை நெறியால்கையில் தேசிய விருது பெற்றுள்ள மலையக இளம் கலைஞனின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், இன்றைய இளம் சமூகம் விரும்பக்கூடிய, சிந்திக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago