2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஓட்டோ - பஸ் மோதியதில் சிறுகாயங்களுடன் இருவர் தப்பினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து கினிகத்தேனை நோக்கிச் சென்ற ஓட்டோ, குயில்வ​த்தை பகுதியிலுள்ள வளைவில் திரும்பும்போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, கண்டியில் இருந்து ஹட்டன் வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதியுள்ளது.

இதன்போதே, ஓட்டோ சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தற்போது  மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றமையால், சாரதிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .